உலகம்
பாகிஸ்தான் :அண்ணன் -தங்கை குறித்து ஆபாச கேள்வி..பல்கலைக்கழக தேர்வில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 'கோம்சாட்ஸ்' (COMSATS) தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழத்தில் தற்போது தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், 'எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படிப்புக்கான தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்வி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வில், "ஜூலி என்பவரும் மார்க் என்பவரும் சகோதர சகோதரிகள். இவர்கள் கல்லூரி கோடை விடுமுறையில் பிரான்ஸை சுற்றிப்பார்க்க செல்று அன்றைய தினம் இரவு, அங்குள்ள ஒரு கடற்கரை அருகே உள்ள ரிசார்ட்டில் தங்குகிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே காம உணர்வு ஏற்பட்டு இருவரும் கருத்தடை சாதனங்களோடு உறவு வைத்துக் கொள்கிறார்கள். பின்னர், இதுபோல இனி நடக்கக்கூடாது எனவும் உறுதி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும்" என்று கூறியுள்ளது.
தேர்வு அறையில் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுதொடர்பாக தேர்வு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கேள்விக்கு பதிலளிக்கவேண்டாம் என கூறியுள்ளனர். அதன்பின்னர் சில மாணவர்கள் இந்த கேள்வி குறித்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட இது பாகிஸ்தானின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியல் பிரபலங்கள், செயல்பாட்டாளர்கள், மத தலைவர்கள் போன்றோர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், சில அமைப்புகள் சார்பில் பல்கலைக்கழகம் முன்னர் போராட்டமும் நடைபெற்றது.
விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகவே பல்கலைக்கழகம் சார்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதில் இந்த கேள்வித்தாளை வடிவமைத்த பேராசிரியர் கைர் உல் பஷார் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே கேள்வித்தாளை ஆய்வு செய்யாததால் இந்த விபரீதம் நடந்துவிட்டதாகவும், இதற்காக மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வாகவும் தெரிவித்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?