உலகம்
ஒரு நாள் லீவு கேட்டு கொடுக்காத முதலாளி.. நீதிமன்றம் சென்று ரூ.3 லட்சம் பெற்ற பெண்: நடந்தது என்ன?
இங்கிலாந்தின் லாண்டாஃப் பகுதியில் முடிதிருத்தம் கடை நடத்தி வருபவர் கிஸிஸ்டினோ டோனெல்லி. இவரது கடையில் வேலை பார்த்து வந்தவர் செலின் தோர்லி. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில் செலின் தோர்லி கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அடுத்தநாள் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்தநாள் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து அவர் கிறிஸ்டியன் டோனெல்லிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி விடுமுறை கேட்டுள்ளார். அதில், "ஹே கிறிஸ். நீ என் மீது கோபப்படப் போகிறாய் என்று எனக்குத் தெரியும். என்னை மன்னிக்கவும். இன்று எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நேற்றைய குழப்பம் இன்று காலை எழுந்ததும் உடம்பு சரியில்லை. சரியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.
ஆனால் வயிறு வலி அதிகமாக உள்ளது. எண்ணால் படுக்கையில் இருந்து கூட எழமுடியவில்லை. எனக்கு இன்று விடுமுறை வேண்டும். மன்னிக்கவும்" என அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து கடுப்பான கிறிஸ்டியன் டோனெல்லி உடனே அவருக்கு பதில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "இனி நீங்கள் வரவே தேவையில்லை. உங்களது வேலை பறிக்கப்பட்டுவிட்டது" என கூறியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த செலின் தோர்லி தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நடத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதில், உண்மையான காரத்தை சொல்லியே செலின் தோர்லி விடுமுறை கேட்டுள்ளார். அவருக்கு மாதவிடாயால் அதீத வலி ஏற்பட்டுள்ளது. அவரை பார்த்து கொள்ள அவரது மாமியாரும் அன்று விடுமுறை எடுத்துள்ளார். இது விசாரணை மூலம் இந்த உண்மை தெரியவருகிறது.
இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் உடனே அவரை பணிநீக்கம் செய்துள்ளார் கிறிஸ்டியன் டோனெல்லி. எனவே இவருக்கு ரூ.3 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் விடுமுறை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!