உலகம்
கடலுக்குள் எண்ணெய் எடுக்கும் வேலை.. 4 லட்சம் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வராத ஆட்கள்.. மர்மம் என்ன ?
பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடற்கரைக்கு சற்று தொலைவில் இருக்கும் வடக்கு கடலில் உள்ள நடுக்கடல் பகுதியில் ஆப்ஷோர் என்பதும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுக்கும் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுத்து, சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்த இடத்துக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலை வாய்ப்பை அறிவித்தது. அதாவது கடலில் இருந்து எண்ணெய் மற்றும் பிற வாயுக்களை வெளியே எடுத்துவருவதே அந்த பணி ஆகும். இதற்காக மாதம் இந்திய மதிப்பில் 4 லட்ச ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் அறிவித்தது.
ஆனால், பல மாதங்கள் கடந்த பின்னரும் இந்த வேலைக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என அந்த நிறுவனம் தற்போது அறிவித்து அதிரவைத்துள்ளது. இதற்கு தேர்வாகும் நபர்கள் 6 மாதம் கடலுக்குள் இருக்க வேண்டும் என்றும், தினமும் 12 மணிநேரம் வேலை செய்யரூ. 36,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும், ஒரு வாரம் விடுமுறை வழங்கி இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தால் சுமார் 1 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவித்தும் இதுவரை யாரும் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் இந்த வேலைக்கு தேர்வாகும் நபர் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர பயிற்சி உள்ளிட்ட சில அடிப்படை பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும் என்றும் அதேபோல மருத்துவப் பயிற்சியுடன் இதர தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த வேலைக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!