உலகம்
"இப்போது இல்லை..பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது" -பாக். பாதுகாப்புதுறை அமைச்சரின் கருத்தால் அதிர்ச்சி!
கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.
பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்தது.
கராச்சி, லாகூர், பைசலாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்டும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெகுவிரைவில் அந்த நாடு திவாலாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் திவால் நிலையில் உள்ளதாகவும் பொருளாதாரம் காலியாகி வருவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், அதெல்லாம் ஏற்கனவே நடந்துவிட்டது என்றே நான் சொல்லுவேன். இனி மக்கள் அவர்கள் சொந்தக்காலில் தான் நிற்க வேண்டும். அப்போது தான் தப்பிப் பிழைக்க முடியும். ஏனெனில் நாம் திவாலான நாட்டில் வசிப்பவர்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு, நாட்டில் மீண்டும் அமைதியின்மை ஏற்படக் காரணமாக இருந்த முந்தைய இம்ரான் கான் அரசு தான் நாட்டின் இந்த நிலைக்கு காரணம். இதனை சரிசெய்ய வாய்ப்புகள் இருந்த போதும், அவர்கள் கோட்டைவிட்டனர். இப்போது நாங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம்"எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!