உலகம்
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்களில் கோளாறு.. 3.36 லட்சம் கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா.. பின்னணி என்ன ?
உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவனம் தான் டெஸ்லா. அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முக்கிய இடம் வகித்து வருகிறது.
பிற நிறுவனங்கள் பெட்ரோலிய வாகனங்கள் உருவாக்குவதில் மும்முரமாக இருந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தியை தொடங்கி இப்போது அந்த துறையில் பிற நிறுவனங்கள் தொடமுடியாத உச்சத்தில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது. அதுமட்டுமின்றி எலான் மஸ்கை உலகபணக்காரர் ஆகியதில் டெஸ்லா நிறுவனத்துக்கு முக்கிய பங்குண்டு.
தனது கார்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதன்மூலம் வடிக்கையாளர்களிடையே நன்மதிப்பை பெற்றுவருகிறது. அதோடு ஓட்டுநர் இல்லா வாகன தொழில்நுட்பத்திலும் முன்னிலையில் இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.
இப்படிபட்ட டெஸ்லா சில மாதங்களுக்கு முன்னர் மாடல் 3 மற்றும் மாடல் y ரக கார்களில் சில தொழில்நுட்ப குறைகள் இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து 3.21 லட்சம் மாடல் 3 மற்றும் மாடல் y ரக கார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2016 முதல் 2023-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான மாடல் 3 மற்றும் 2020 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட மாடல் ஒய் ஆகிய ரகங்களை சேர்ந்த 3.36 லட்சம் கார்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்தவகை கார்களில் இருக்கும் மென்பொருளின் தவறான செயல்பாடு காரணமாக விபத்து ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தரக கார்களில் தொழிநுட்ப கோளாறு சரிசெய்து புதுமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!