உலகம்
“எங்க டீம்ல வழுக்கை தலை உள்ள ஆள் வேண்டாம்..” வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்.. அதிரடி காட்டிய நீதிமன்றம் !
பொதுவாக பணி செய்யும் இடங்களில் அங்குள்ளவர்கள் கேலி செய்வது நாம் அறிந்த ஒன்றே. அது நம்மை சேர்ந்த ஒரு விஷயத்தை பற்றி அவர்கள் கிண்டல் செய்வது சிலர் வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், பலருக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கிறது.
இதனை பாடி ஷேமிங் - உருவ கேலி என்று சொல்வர். இவ்வாறு ஒருவரை பாடி ஷேமிங் செய்வது சிலரை சிலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகிறது. இதனால் சிலர் தற்கொலை கூட செய்துகொள்கின்றனர். இது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். அப்படி ஒன்றுதான் தற்போது இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் அரங்கேறியுள்ளது.
அதாவது இங்கிலாந்தில் உள்ளது டாங்கோ நெட்ஒர்க் கம்பெனி. இதில் பல்வேறு ஊழியர்கள் பணி புரியும் நிலையில், மார்க் ஜோன்ஸ் என்ற நபரும் பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கு தலையில் முடியில்லாமல் வழுக்கையாக இருந்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் இவரை கேலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வழுக்கை இருந்ததால் இவர் வயது முதிர்ச்சி அடைந்துவிட்டது போல் காட்சி அளித்துள்ளார். இதனால் அங்கிருக்கும் இவரது மேலதிகாரி பிலிப் என்பவர், இவரை பணியை விட்டு நீங்குமாறு கூறியுள்ளார்.
மேலும் தனது நிறுவனத்தில் இளைஞர்கள் போன்றவர்கள் வேலை பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என விளக்கமும் அளித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த பில்புக்கு சுமார் 50 வயது இருக்கும்; அவருக்கும் வழுக்கை தலை இருக்கும்.
இதனால் மனமுடைந்து வேறு வழியின்றி ஜோன்ஸ் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து தன்னை நீக்கிய நிறுவனம் மீது ஜோன்ஸ் வழக்கு தொடுத்தார். இந்த வாழ்க்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதன் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ஜோன்ஸ்-ஐ அவர் வேலை செய்து வந்த நிறுவனம் சரியான காரணம் எதுவும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஜோன்ஸுக்கு 71 ஆயிரம் பவுண்ட்ஸ் (71,000 Pounds) (இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் ) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இது அவருக்கு கிடைத்த நீதியாக ஜோன்ஸ் பார்க்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழுக்கையுடன் இருப்பதால் அதிக துன்பத்தை அனுபவித்து வருவதால் தங்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 ஓய்வூதியம் வேண்டும் என தெலங்கானாவில் சங்கம் உருவாக்கி கோரிக்கை வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !