உலகம்
உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு CEO-வாக இருக்கும் இந்தியர்கள்: எந்தெந்த நிறுவனம்? யார் யார்? பட்டியல் இதோ!
இந்த நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு விட்டது. இந்த காலத்தில் எல்லாம் நவீனம் இல்லாமல் எதுவும் நகராது. முன் காலத்தில் ஒரு விஷயம் தெரிய வேண்டுமென்றால் அது செவி வழியாக வருவது.. காலப்போக்கி ரேடியோ, பேப்பர்.. பின்னர் தொலைக்காட்சி.. தற்போதெல்லாம் Youtube போன்ற தளங்கள்..
இந்து போன்ற தளங்கள் உலகம் எங்கிலும் இயங்கி வருகிறது. Youtube என்பது வீடியோவுக்கான தளமே தவிர, எழுத்து வடிவத்திற்கு கூகுள் போன்றவை உள்ளது. இந்த கூகுளில் நாம் தேடும் அனைத்து பொதுவான செய்திகளும் இருக்கும். வரலாறு, பொழுதுபோக்கு, அரசியல் என அனைத்தும் இதில் காணமுடியும். உள்ளூர் முதல் உலக அளவில் அனைத்து விஷயங்களையும் நம்மால் அறிந்துகொள்ள இயலும்.
இப்போது இதுபோன்ற இணைய தளங்கள் இல்லாமல் நம்மால் இயங்க கூட முடியாது. நமக்கு எதுவும் தெரியாத சமயத்தில் உடனே கூகுளை தேடி பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும். இது போன்ற பல தளங்கள் தற்போது உலகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சில முன்னணி தளங்களுக்கு தற்போது இந்தியர்கள்தான் தலைமை செயல் அதிகாரியாக (CEO ) பதவி வகித்து வருகிறார்கள்.. அதன் பட்டியல் பின்வருமாறு : -
=> YouTube - நீல் மோகன்
=> Google - சுந்தர் பிச்சை
=> Microsoft - சத்யா நாதெல்லா
=> IBM - அரவிந்த் கிருஷ்ணா
=> Adobe- சாந்தனு நாராயண்
=> Vimeo - அஞ்சலி சூட்
=> Starbucks - லக்ஷ்மன் நரசிம்மன்
=> FedEx- ராஜ் சுப்ரமணியம்
=> VMWare - ரங்கராஜன் ரகுராம்
=> Palo Alto - நிகேஷ் அரோரா
=> Google Cloud, NetApp - குரியன் சகோதரர்கள் (ஜார்ஜ் குரியன் & தாமஸ் குரியன்)
இதில் Youtube நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO ) பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இன்று Youtube-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சார்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!