உலகம்
2026-ம் ஆண்டுக்குள் பறக்கும் டாக்ஸிகள் ! கையெழுத்தான ஒப்பந்தம்.. துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு !
அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது பறக்கும் பைக், கார் வரை உலகம் அதீத அறிவியல் வளர்ச்சியை கண்டுள்ளது.
கடந்த வருடம் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி . டெட்ராய்டில் நடந்த வாகன கண்காட்சியில் பறக்கும் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சீன நிறுவனம் வடிவமைத்த அதிநவீன பறக்கும் கார் துபாயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
X-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரை இறங்கும் ஆற்றல் உடையது. இந்த கார் செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரை இறங்கும் ஆற்றல் உடையது. ட்ரோன்களை போல் 4 புரொப்பல்லர்களால் இயங்கும் X-2 பறக்கும் காரில் ஒரே நேரத்தில் 2 பேர் பயணிக்கலாம் என இதை உருவாக்கிய சீன நிறுவனம் கூறியிருந்தது.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும்' என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
பறக்கும் டாக்ஸிகளுக்கான நிலையங்கள் அமைக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக பறக்கும் டாக்ஸி சேவையானது துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன் துபாய், பாம் ஜுமேரா, துபாய் மெரினா ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!