உலகம்
அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முன்னணி நிறுவனங்கள்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.
அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் அமேசான், கூகுள் நிறுவனங்களும் தங்கள் 5% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா காலத்தில் அதிக ஊழியர்களை இந்த நிறுவனங்கள் வேலைக்கு எடுத்ததே தற்போது இப்படி ஊழியர்களை நீக்க காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டிலேயே இருந்த காரணத்தால் டிஜிட்டல் சேவையின் பயன்பாடு பெரிய அளவில் பெறுகியது.
இதன் காரணமாக ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைத்தது. இந்த வருவாய் அப்படியே தொடரும் என கருதிய அந்த நிறுவனங்கள் அதிகப்படியாக ஊழியர்களை வேலைக்கு எடுத்தன. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், டிஜிட்டல் சேவையின் பயன்பாடும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்ட மேற்க்கூறிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த கருத்தை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி, மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா ஆகியோர் வெளிப்படையாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!