உலகம்

உக்ரைன் வீரரின் உடலுக்குள் வெடிக்கும் தருவாயில் இருந்த Grenade Bomb.. உயிரை பணயம் காப்பாற்றிய மருத்துவர்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் உலகளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் தொடங்கி 1 வருடத்தை நெருங்கும் நிலையில், இந்த போரில் உக்ரைன் இராணுவ வீரர்களும், ரஷ்யா இராணுவ வீரர்களும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த போரில் சில நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், மற்ற சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். அதோடு இந்த போரானது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

போருக்கு முன்பே உக்ரைன் நாட்டு பெண்கள், குழந்தைகள் அந்நாட்டு அரசு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த போரில் வீரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் உயிரை துறக்க நேரிடுகிறது.

போர்க்களமாக காட்சியளிக்கும் இந்நாடுகள், எப்போது போரை நிறுத்தும் என அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் இந்த போரில், இரு நாட்டு வீரர்களும் குண்டடிபட்டு உயிரை துறக்கின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் வீரர் ஒருவரது உடலில் பாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கும் தருவாயில் இருந்தபோதிலும், மருத்துவர் ஒருவர் பொருட்படுத்தாமல் அவர் உயிரை காப்பற்றியுள்ள சம்பவம் உலக நாடுகளுக்கிடையே பெரும் பாரட்டை பெற்று வருகிறது.

அதாவது போரின்போது உக்ரைன் இராணுவ வீரர் ஒருவரது ஒருவரின் உடலில் கையெறி குண்டு என்று சொல்லப்படும் Grenade Bomb துளைத்துக்கொண்டு வயிற்று பகுதியில் சிக்கியிருந்தது. அந்த வெடிகுண்டு வெடிக்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால் அதனை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டிய கட்டாயத்தில் மருத்துவர் இருந்தார்.

அந்த கையெறி குண்டு எந்த நேரத்திலும் வெடித்துவிடும் சூழ்நிலையில் இருந்தது. எனவே சிகிச்சை செய்யும்போது வெடித்துவிடும் என்ற பயத்தில் மருத்துவர்கள் சிலர் அருவை சிகிச்சை மேற்கொள்ள பயந்து ஒதுங்கினர்.

இந்த நிலையில் வின்னிட்சியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி வெர்பா என்பவர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முனவந்தார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது உடலிலிருந்து கையெறி குண்டை வெற்றிகரமாக அகற்றினார்.

பின்னர் '30mm VOG-30' என்ற அந்த கையெறி குண்டை அருகிலிருந்த வீரர்கள் உடனடியாக செயலிழக்கச் செய்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இராணுவ வீரர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். தன் உயிரையையும் பொருட்படுத்தாமல் இராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய மருத்துவரின் செயலால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Also Read: 10 நாளில் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்: சோகத்தில் உறவினர்கள்!