உலகம்
5 குழந்தைகள் உட்பட 7 பேரை சுட்டுக்கொன்ற தந்தை.. அமெரிக்காவில் நடந்த கோர சம்பவத்தின் பின்னணி என்ன ?
அமெரிக்காவில் மைக்கேல் ஹைட்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்கள் வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த நிலையில், இருவருக்குமிடையே அண்மைக்காலமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மனைவி, தனக்கு விவாகரத்து வேண்டும் என்று தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவனும் தனது மனைவியை சமாதானம் செய்துள்ளார். இருப்பினும் சமரசத்திற்கு மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மனைவி குழந்தைகள் இல்லாமல் தன்னால் வாழ இயலாது என்பதை உணர்ந்த கணவன், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தார்.
மேலும் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மனைவியை சுட எண்ணியுள்ளார். அதன்படி சம்பவ நடந்த நாளன்று இரவு, தனது மனைவி வீட்டிற்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இருப்பினும் அது சரி வராததால் தனது மனைவி, மாமியார், 3 பெண் பிள்ளைகள், 2 ஆண் பிள்ளைகள் என மொத்தம் 7 பேரை சுட்ட கொன்றுள்ளார்.
பின்னர் மனம் நொந்துபோன மைக்கேல், தனது துப்பாக்கியை கொண்டு தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அனைவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரமடைந்த கணவர், தனது 5 குழந்தைகள் உட்பட 7 பேரை சுட்டு கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்