உலகம்

உலகையே உலுக்கிய மர்ம மரணம்.. ரஷ்ய அதிபரை விமர்சித்த ரஷ்ய MP.. இந்தியாவில் திடீர் இறப்பு.. போலிஸ் விசாரணை!

உக்ரைன் மீது ரஷ்ய தொடர்ந்து 10 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரை பல்வேறு நாட்டினரும் விமர்சித்து வருகின்றனர். பல நாடுகளுக்கு இந்த போரில் உடன்பாடு இல்லாத நிலையில், சில நாட்டினர் இதற்கு தொடர்ந்து கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய மாடல் இளம்பெண் ஒருவர், உக்ரைன் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷ்ய நாட்டினரே பெரும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அங்குள்ள பொதுமக்களும் இந்த போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து ரஷ்ய நாட்டினரே ரஷ்யாவுக்கு கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்ய நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்திருந்தார்.

அதாவது ரஷ்யாவின் புதின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கோடீஸ்வரருமான பாவெல் ஜென்ரிகோவிச் ஆண்டோவ் (Pavel Antov) என்பவர் புதின் போர் விவகாரம் தொடர்பாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஆண்டோவ், கடந்த 22-ம் தேதி தனது 66-வது பிறந்தநாளை கொண்டாட தனது 4 நண்பர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவுக்கு வந்திருந்தார். அப்போது தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

Pavel Antov

அன்றிரவு அனைவரும் நன்றாக மது அருந்திவிட்டு பார்ட்டி கொண்டாடிவிட்டு ஹோட்டலில் உள்ள அவரவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் ஆண்டோவின் நண்பரான விளாடிமிர் புடானோவ் (Vladimir Budanov) என்பவர் அவரது அறையில் இறந்து கிடந்திருக்கிறார். இதனை கண்டு அதிர்ந்த அனைவரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Vladimir Budanov

இதைத்தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தனது நண்பரின் மறைவால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்த ஆண்டோவ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு (25-ம் தேதி) ஓட்டல் அறையிலுள்ள ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஒரே வாரத்தில் இரண்டு ரஷ்யர்கள் ஒடிசா ஹோட்டலில் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியது. இருப்பினும் காவல்துறையினர் இந்த இரு நிகழ்வு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த அரசியல் பிரமுகர் மற்றும் அவரது நண்பர் இந்தியாவில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது.

Also Read: “அது honey trap இல்ல: பாடி ஷேமிங் செய்தார் - அண்ணாமலை பெயரை சொல்லி”: சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி பகீர்