உலகம்
ரூ.1.2 லட்சம் Laptop-க்கு பதில் பார்சலில் இருந்த Pedigree உணவு.. Amazon-ல் தொடரும் குளறுபடிகள்!
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் பயன்படுத்துவது தற்போது அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. இந்த இ -காமர்ஸ் தளத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையுமே வாங்கி பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது.
இப்படி ஆர்டர் செய்து வாங்கும் போது சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு ஒரு பொருட்கள் மாற்றி வரும் சம்பவங்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த தவறை தடுக்க இ- காமர்ஸ் தளங்கள் முயற்சி செய்தாலும் அவர்களால் இதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் ரூ.1.2 லட்சத்திற்கு ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதில் நாய் உணவு வந்துள்ள சம்பவம் மீண்டும் இ- காமர்ஸ் தளங்கள் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆலன் வூட். இவர் தனது மகளுக்காக கடந்த நவம்பர் 29ம் தேதி அமேசானில் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள ஒரு லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு அடுத்த நாள் பார்சல் டெலிவரியாகியுள்ளது.
இதைப்பிரித்துப் பார்த்தபோது அதில் லேப்டாப்பிற்கு பதில் நாய்க்கு வழங்கப்படும் பெடிகிரி உணவு டப்பா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து அமேசான் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். முதலில் அவர்கள் நீங்கள்தான் தவறாக ஆர்டர் செய்து இருப்பீர்கள் என கூறியுள்ளனர்.
பின்னர்தான் தங்கள் தவறை உணர்ந்த அவர்கள் பணத்தை திருப்பி அனுப்புவதாக ஒத்துக் கொண்டனர். நடந்த தவறுக்கு மன்னிப்பும் அமேசான் நிறுவனம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் இ- காமர்ஸ் தளத்தை பயன்படுத்துவோர் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!