உலகம்
"Twitter CEO-வாக ஒரு முட்டாளை விரைவில் கண்டறிகிறேன்" - எலான் மஸ்க் கோவமான ட்வீட்டின் பின்னணி என்ன ?
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், 12 மணி நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்கின் மிரட்டல் காரணமாகி தானே முன்வந்தும் ஏராளமான ட்விட்டர் பணியாளர்கள் ராஜினாமாக்களை அனுப்பிவருகின்றனர்.
இதனிடையே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (CEO ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பு தொடங்கிய 4 மணி நேரத்திலேயே சுமார் 90 லட்சம் பேர் அதில் தங்கள் வாக்குகளை பதிவிட்டு இருந்தனர்.
இந்த வாக்கெடுப்புக்கான முடிவு தற்போது வெளிவந்துள்ளது. அதில் மொத்தம் வாக்கு செலுத்தியவர்களில் 57.5 % பேர் எலான் மஸ்க் CEO பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 42.5% பேர் மட்டுமே எலான் மஸ்க் CEO பதவியில் தொடரலாம் என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் "பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் CEO பதவியிலிருந்து, நான் ராஜினாமா செய்கிறேன். அதன்பின்னர் மென்பொருள் மற்றும் சர்வர் பிரிவுக்கு மட்டுமே தலைமை வகிப்பேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?