உலகம்
வெடித்து சிதறிய மிகப்பெரிய அக்வாரியம்.. உயிரிழந்த 1,500 மீன்கள்.. வெளியேறிய 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் !
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் உள்ள ரேடிசன் ஹோட்டல் என்னும் இடத்தில மிகப்பெரிய அக்வாரியம் ஒன்று அமைந்துள்ளது. உருளை வடிவில் 46 அடி கொண்ட இந்த அக்வாரியம் உலகின் மிகப்பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் உருளை அக்வாரியம் எனக் கூறப்படுகிறது.
இந்த அக்வாரியத்தில் 1 மில்லியன் லிட்டர் தண்ணீரோடு சுமார் ஆயிரத்து 500 மீன்களும் இருந்தன. இந்த நிலையில் இந்த உருளை அக்வாரியம் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக வெள்ளம் போல நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், அதில் இருந்த ஏராளமான மீன்களும் சாலையில் சிதறி கிடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்டோர் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர், அக்வாரியம் வெடித்தது ஒரு நிலநடுக்கம் போல் உணரப்பட்டதாகவும், சாலை முழுக்க உயிரிழந்த மீன்களும், குப்பைகளுமாக திரண்டு இருந்ததாகவும் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நடந்ததற்கு என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியாத நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ந்த அக்வாரியம் கடைசியாக 2020-ல் புதுப்பிக்கப்பட்டதாகவும், கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள அக்வாரியத்தில் மீன் வளர்ப்பு பராமரிப்பு வசதி உள்ளதால் மீன்கள் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்