உலகம்
ரிஷி சுனக்குக்கு மிரட்டல் விடுத்த சொந்த கட்சி எம்.பி.க்கள்.. கவிழ்கிறதா ஆட்சி ? பரபரப்பில் பிரிட்டன்!
இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகினார்.
இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பதவியேற்ற சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாக அமைந்துள்ள நிலையில், நெருக்கடியை சமாளிக்க பல அதிரடி நடவடிக்கைகளை ரிஷி சுனக் எடுத்து வருகிறார். எனினும் தொடர்ந்து பிரதமர்கள் அங்கு மாறிவரும் நிலையில் மக்களிடையே ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நம்பிக்கை இழந்து வருவதாக தொடர்ந்து அங்கு கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடேன்ற்து இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலைதான் இன்னும் 2 ஆண்டுகளில் அங்கு நடக்கும் பொதுதேர்தலில் நடக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குக்கு ஆளும் கட்சியை சேர்ந்த 40 எம்.பி.க்கள் எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர். இதற்காக கன்சா்வேட்டிவ் முன்னேற்றம் என்ற பெயரில் குழு அமைத்துள்ள அந்த எம்.பி.க்கள் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும், அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடங்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரசுப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் ரிஷி சுனக்குக்கு ஆலோசனை கூறியதோடு அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இது பிரிட்டனின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!