உலகம்
Twitter கணக்கு இருந்தால் உடனே அதை பயன்படுத்துங்கள்.. பயன்படுத்தாதவர்களுக்கு ஆப்பு வைக்கும் எலான் மஸ்க் !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், 12 மணி நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்கின் மிரட்டல் காரணமாகி தானே முன்வந்தும் ஏராளமான ட்விட்டர் பணியாளர்கள் ராஜினாமாக்களை அனுப்பிவருகின்றனர்.
இந்த நிலையில், பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 1.5 பில்லியன் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்த அவர்,"ட்விட்டர் விரைவில் 1.5 பில்லியன் கணக்குகளை நீக்கும். இவை ட்வீட்கள் மற்றும் பல ஆண்டுகளாக உள்நுழைவு இல்லாத வெளிப்படையான கணக்கு நீக்கம் செய்யப்படும்" என கூறியுள்ளார்.
இதனால் பிரபலங்களை பின்தொடருவோர் எண்ணிக்கை குறையும் என்றும், ட்விட்டர் நிறுவனத்தை புதுப்பிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!