உலகம்
நீங்கள் எங்கள் அரசரே இல்லை.. மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய குடிமக்கள்.. பரபரப்பில் பிரிட்டன் !
உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது. அண்ட் அளவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிட்டனுக்கு காலணிகள் இருந்தது/.
20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில நாட்களுக்கு முன்னர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கின்போதே அரச குடும்பத்தை எதிர்த்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் கையில் "என் அரசனில்லை" (புதிய அரசர் சார்லசை ஏற்கமறுத்து) என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர்.
இப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆக்ஸ்போர்டை சேர்ந்த சைமன் ஹில் என்ற நபர் "யார் அவர்களை தேர்ந்தெடுத்தது?" என்று அரச குடும்பத்தை நோக்கி கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து ட்விட்டரில் #NotMyKing என்ற ஹாஷ்டாக ட்ரெண்டாகியது. அதில் பதிவிடும் பெரும்பாலான மக்கள் பிரிட்டனை முடியாட்சியில் இருந்து குடியாட்சியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பொதுமக்களை சந்தித்த மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டுள்ளது பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் சார்லஸ் மக்களோடு உரையாடி கொண்டிருக்கும் போது அவர் நின்ற திசை நோக்கி சில முட்டைகள் கீழே விழுந்து உடைந்தது. யார் எறிந்தார்கள் என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து பொருட்கள் வீசப்பட்டு அவைகளும் உடைந்து சிதறின. இதனைத் தொடர்ந்து மன்னரை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நீங்கள் எங்கள் மன்னர் அல்ல என்று கோஷங்கள் எழுந்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கு முன்னரும் மக்களை சந்தித்த மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!