உலகம்
தென் கொரிய சீரிஸ் பார்த்த சிறுவர்கள்.. மரண தண்டனை வழங்கிய வட கொரியா இராணுவம்? அதிர்ச்சியில் உலகம் !
உலக நாடுகளிலே மிகவும் கவனம் ஈர்த்த நாடு என்றால் அது வட கொரியா தான். ஏனென்றால் அங்கே நடக்கும் நிகழ்வு தான் உலக அரங்கில் வெளியில் தெரிவதில்லை. வட கொரியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊடகத்தை அந்நாட்டு அரசு தனது கடப்பாடுக்குள் வைத்துள்ளது.
மேலும் அந்நாட்டு அரசு சொல்லும் செய்தியை தான் ஊடங்கள் வெளியிட வேண்டும், அதை தான் மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடுகளே உள்ளது. இவ்வளவு ஏன், கொரோனா காலகட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும், தங்கள் நாட்டில் பரவும் கொரோனா குறித்து செய்திகளில் வெளியிட்ட சமயத்தில் வட கொரியா மட்டும் அது தொடர்பாக எந்த செய்திகளையும் வெளியிடவில்லை.
இப்படி பல கட்டுக்கோப்புகள் விதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டில், கடந்த ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் வீடியோக்கள், சிடிக்கள் போன்றவற்றை விற்பனை செய்தாலோ, அவற்றைப் பார்த்தாலோ, அவை குற்றமாகக் கருதப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற கடுமையான சட்டத்தை விதித்தார் என்ற தகவல்களும் பரவின.
இந்த நிலையில், வட கொரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் தென்கொரிய நாடகத்தைப் பார்த்ததாக கூறி வட கொரியா இராணுவம் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு வடகொரியாவின் ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அங்குள்ள எந்த செய்தி நிறுவனமும் கடந்த வாரம் வரை செய்திகள் வெளியிடாத நிலையில், தற்போது இது குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, 2 சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் தூக்கு தண்டனை நிறைவேற்றியதாக வெளியான தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!