உலகம்
வேலையே கொடுப்பதில்லை.. ஊதியம் மட்டும் ஒரு கோடி.. வேதனையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த இளைஞர்!
ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் கொத்து கொத்தாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நிறுவனம் தனக்கு வேலையை கொடுக்காமல் ஆண்டுக்கு ரூ.1.30 கோடி ஊதியம் தருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மெட்மார் அலஸ்டெய்ர் மில்ஸ். இவர் ஜரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தின் நிதி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத்தான் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் மாதம் மாதம் ஊதியம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் கடும் மன உலைச்சல் அடைந்த மெட்மார் மில்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தான் வேலைபார்த்து வரும் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இது குறித்துக் கூறும் டெட்மார் மில்ஸ், "நான் அலுவலகத்திற்கு வந்தால் எனக்கு எந்த வேலையும் கொடுக்கப்படுவதில்லை. சக பணியாளர்கள் கூட வேலை தொடர்பாக எண்ணிடம் எதுவும் பேசுவது இல்லை. எந்த வேலையும் செய்யாமல் நான் தினமும் வீட்டிற்கு வருகிறேன்.
அலுவலகத்தில் இருக்கும்போது புத்தகம் வாசிப்பது, சாண்ட்விச் சாப்பிடுவது இதுதான் எனது வேலையாக இருக்கிறது. எனது நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேட்டை வெளியே கொண்டுவந்தேன். அன் பிறகு எனக்கு 3 மாதம் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வேலைக்கு வந்த பிறகு எனக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை. மாதம் மாதம் ஊதியம் மட்டுமே கொடுத்து வருகின்றனர்.எனது திறமையை ஏற்காததால்தான் நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!