உலகம்

பதைபதைக்க வைத்த ஆபத்தான கடற்பயணம்.. எப்போது தீரும் அகதிகளின் இந்த துயரம் ?

ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு போர் மற்றும் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் அன்றாடம் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அன்றாட உணவுக்கே பொதுமக்கள் அங்கு ஏராளமான அளவில் இருக்கின்றனர். இதனால் அந்த நாட்டில் பட்டினி சாவுகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க ஏராளமானோர் அகதிகளாக கப்பல் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வருகின்றனர். சட்டவிரோதமாக இவர்கள் செல்வதால் சட்டவிரோத கப்பலில் தங்களால் முடிந்த அளவு பணம் கொடுத்து தங்கள் குடும்பத்தின் உயிரை காப்பாற்ற ஆபத்தான முறைகள் பயன்செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், நைஜீரியாவை சேர்ந்த 3 அகதிகள் எண்ணெய் கப்பலின் பின்பகுதியில் அமர்ந்து கொண்டு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தீவுக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் லாகோஸில் இருந்து அலிதினி - 2 என்ற எண்ணெய் கப்பலின் பின்பகுதியில் யாருக்கும் தெரியாமல் 3 பேர் ஏறியுள்ளனர்.

அதேநிலையில் சுமார் 11 நாட்களும், 3,200 கி.மீட்டரும் கடல் பயணம் செய்த அவர்கள் அத்தனை நேரம் உணவு, குடிநீர் இல்லாமல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். பின்னர் அவர்கள் இறுதியாக ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான கேனரி தீவை அடைந்துள்ளனர். அவர்களை அங்கு கண்ட அதிகாரிகள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் உடல்நிலை மோசமாகி இருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ’சார் இது உண்ணாவிரதப் போராட்டம்’.. கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூத்து!