உலகம்
சோமாலியாவில் விழுந்த விண்கல்:உடைத்துப்பார்த்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..உள்ளே இருந்தது என்ன?
தங்கத்தை தேடிச்சென்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் ஹோலே என்பவருக்கு கடந்த 2015- ஆம் ஆண்டு வித்தியாசமான கல் ஒன்று கிடைத்துள்ளது. முதலில் அதனை தங்கம் என்று நினைத்தவர் பின்னர் அதனை ஆராய்ந்து பார்த்தபோது அது ஒரு விண்கல் என்பது தெரியவந்தது.
அதன் காரணமாக அதனை சோதனை செய்ததில் இந்த கல் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த விண்கல் என்பதும், வளிமண்டலம் வழியாக வரும் போது அதிக வெப்பத்தால் வெளிப்புறத்தில் உருகி அதன்பிறகு ஒன்று திருண்டு இப்படி அரிய கல்லாக மாறியுள்ளது தெரியவந்தது.
இந்த விண்கல் உலகம் முழுவதும் பரவலான கவனத்தை ஈட்டிய நிலையில், தற்போது மற்றொரு விண்கல் ஆராட்சியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த சோமாலியாவில் சுமார் 14 டன் எடையுள்ள ஒரு விண்கல் ஒன்று விழுந்துள்ளது.
அதனை ஆராட்சியாளர்கள் எடுத்து சோதனை செய்தனர். அதன் ஒருபகுதியாக அந்த விண்கல்லை இரண்டாக பிரித்து சோதனை செய்தபோது அதில் இதுவரை நாம் அறிந்திடாத 2 தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற ஒரு தனிமம் பூமியில் கண்டறியப்படாத நிலையில், இது ஆராட்சியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புதிய தாதுக்களுக்கு - எலாலைட் (Elaliite) மற்றும் எல்கின்ஸ்டன்டோனைட் (Elkinstantonite) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அந்த விண்கல்லில் மேலும் சில தனிமங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியவும் சோதனை நடைபெற்றுவருகிறது.
Also Read
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!