உலகம்
48 மணி நேரத்தில் 900 கார்களை பஞ்சராக்கிய போராட்டக்குழு.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள் !
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் = கடும் வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் முன்பு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.
அதேநேரம் வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் அதிக மழை பொழிவு ஏற்பட்டு அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், ஆப்ரிக்கா போன்ற சில இடங்களில் கடும் வறட்சி நிலவு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அளவு நிலைமை மோசமாகியுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கு வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் அளவு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிக உமிழை ஏற்படுத்தும் வாகனங்கள் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகளின் அரசுகளும் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
இந்த நிலையில், உலகம் முழுக்க நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், ஆஸ்திரேலிய, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளில் கார்களை பஞ்சர் ஆக்கும் போராட்டத்தில் காலநிலை மாற்ற குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பார்க்கிங்குகள், வீட்டின் முன்னர் நிற்கும் கார்களை இவர்கள் பஞ்சர் செய்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக கார்பனை வெளியேற்றம் பழைய ரக கார்களையே பஞ்சர் செய்வோம் என இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதால் பழைய கார் உரிமையாளர்களிடையே தொடேன்ற்து அச்சம் நிலவுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகம் முழுக்க இந்த குழுவினர் சுமார் 10 ஆயிரம் வாகனங்களை பஞ்சர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் உச்சமாக கடைசி 48 மணி நேரத்தில் இவர்கள் உலகம் முழுக்க சுமார் 900 கார்களை பஞ்சர் செய்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!