உலகம்
விமான நிலையத்துக்கு வந்த சூட்கேஸ்.. ஸ்கேன் செய்துபார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. நடந்தது என்ன ?
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வெளிஊர் செல்வதற்காக வாஷிங்டனில் உள்ள கென்னடி விமனநிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு வழக்கமான சோதனைகளை முடித்த அவர் பின்னர் உடமைகள் சோதனை செய்யும் இடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் கொண்டுவந்த பெரிய ட்ராவல் சூட்கேஸை ஸ்கேன் செய்தபோது அதில் ஒரு விலங்கு இருப்பதைப் போல பதிவாகியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோதனை செய்பவர் அந்த சூட்கேஸை பார்த்தபோது அதன் ஜிப்பரில் சில சிகப்பு ரோமங்கள் இருந்துள்ளது.
பின்னர் உடனடியாக அதை திறந்துபார்த்தபோது அதில் உயிருடன் ஒரு பூனை இருந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சூட்கேஸை கொண்டுவந்தவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அதனை தான் எடுத்துவரவில்லை ஏன் உறுதிபட தெரிவித்தார்.
மேலும், அந்த பூனை தனது வீட்டில் இருக்கும் மற்றொருவருடையது எனவும், பொருள்களை எடுத்துவைக்கும்போது தெரியாமல் உள்ளே சென்றிருக்கும் என்றும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பூனை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் சிக்கிய பயணி தான் செல்லவிருந்த விமானத்தை தவறவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த பூனை விமானத்தின் உள்ளே சென்றிருந்தால் அங்குள்ள அழுத்தத்தில் அது இறந்திருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!