உலகம்
ஒருவேலை சாப்பாட்டுக்கு ரூ. 1 கோடி செலவு செய்த நபர் : tax மட்டும் 6 லட்சம்.. இணையத்தில் வைரலாகும் பில்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துருக்கியைச் சேர்ந்தவர் நுஸ்ரெட் கோக்சின். இவர் பிரபலமான உணவுக் கலைஞர். உணவு பிரியர்களும், சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்களும் இவரைத் தெரியும். இவரது பெயர் பலருக்கும் தெரியவில்லை என்றாலும் இவர் விதவிதமாக செய்யும் உணவு வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.
அவர் தனது கையை பாம்புபோல் வைத்துத் தான் சமைத்த உணவின் மீது உப்புபோன்ற வெள்ளையான ஒன்றை அப்படியே தூவும் வீடியோ காட்சிகளை நாம் பலரும் பார்த்திருப்போம். இதுதான் அவரின் அடையாளம். இவர் நடத்தும் உணவகத்தில் லியோன் மெஸ்ஸி, லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் வந்து சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நுஸ்ரேட் கோக்சி நடத்தும் உணவகத்தில் ஒருவேலைச் சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரூ.1.3 கோடிக்கு பில்லுக்கு ரூ. 6 லட்சம் வரி கணக்கிடப்பட்ட பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பில் தொகையைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்து பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரின் உணவகத்தில் ஒரு வேலை இரவு உணவே இந்திய மதிப்பு படி ரூ.22 ஆயிரமாகும். இதற்குமேல் உணவு வகைகளுக்கு ஏற்ப விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகின் வசதிபடைத்தவர்கள் மட்டுமே இந்த உணவகத்தில் சாப்பிட முடியும்.
நுஸ்ரேட் கோக்சி தனது படிப்பைக் கைவிட்டுவிட்டு 2010ம் ஆண்டில் உணவகத்தை நடத்தத் தொடங்கியுள்ளார். இதற்கு முன்பு பல உணவகங்களில் இலவசமாகச் சமையல் கலைஞராக பணியாற்றியுள்ளார். பின்னர் சொந்தமாக உணவகத்தைத் தொடங்கி புதிய புதிய உணவுகளை அறிமுகம் செய்த வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளார். இவர் சமைத்த தங்கம் இழைத்த கறி உணவைச் சாப்பிடவே கூட்டம் வருகிறது. மேலும் நுஸ்ரேட் கோக்சி சமைக்கும் உணவு வீடியோவை பார்ப்பதற்காகவே 49 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!