உலகம்
திடீர் திருப்பம்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஜோ பைடன்.. நடந்தது என்ன?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் அருகே உள்ள போலந்து நாட்டில் ஏவுகணை விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என போலந்து குற்றம் சாட்டியது. ஆனால், போலந்தின் இந்த குற்றசாட்டை ரஷ்யா மறுத்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்த ஏவுகணை ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டது இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் போலந்தில் விழுந்த ஏவுகணை உக்ரைன் அனுப்பியதாக இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவை நோக்கி செலுத்திய ஏவுகணை திசைமாறி போலந்தில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக உக்ரைனுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!