உலகம்
தொடர்ந்து நஷ்டம்.. ட்விட்டர், மெட்டா வரிசையில் தற்போது அமேசான்.. 10,000 பேருக்கு பறிபோகும் வேலை!
உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் நிதிநெருக்கடி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின உரிமையாளரான கையோடு அதில் பணியாற்றிய 90% ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார் எலான் மஸ்க். அதேபோல் பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக மெட்டாவில் இருந்து 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி உலகின் பிரபலமான முன்னணி நிறுவனங்களே தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வரும் சம்பவம் ஐ.டி உள்ளிட்ட துறைகளில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ட்விட்டர், மெட்டா நிறுவனத்தைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமாக இருக்கும் அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லாபம் இல்லாததால் செலவுகளைக் குறைக்கவே இந்த நடவடிக்கையை அமேசான் நிறுவனம் எடுக்க உள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.
அதேபோல் அமேசான் நிறுவனத்தின் alexa braava jet, வீட்டு பாதுகாப்பு கேமராக்கள், சில்லறை வணிகம், மனித வள பிரிவுகளில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. உலகின் பிரபலமான முன்னணி நிறுவனங்களே தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வரும் சம்பவம் ஐ.டி உள்ளிட்ட துறைகளில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!