உலகம்

"இதுவல்லவா மாமியார் பாசம்.." - மகனின் குழந்தையை பெற்றெடுத்த 56 வயதானதாய் : மருமகளுக்காக செய்த நெகிழ்ச்சி!

மருமகள் கர்ப்பப்பையில் பிரச்னை என்பதால், அவர்களது குழந்தையை சுமந்து பெற்றெடுத்துள்ள 52 வயது தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மாமியார் - மருமகள் இடையே சுமூகமான உறவு அவ்வளவு எளிதில் காணப்படாது. குதிரை கொம்பு போல் அரிதாக காணப்படும் இதுபோன்ற உறவுக்குள் இருக்கும் பாசம் கணிசமாகவே காணப்படுகிறது.

அப்படி பட்ட உறவு தான் அமெரிக்காவில் இருக்கும் மாமியார் - மருமகள் இடையே இருக்கிறது. அதுவும் எந்த அளவு என்று சொல்ல வேண்டுமானால் மருமகளுக்காக மகனின் கருவையே சுமக்கும் அளவிற்கு குடும்பத்தில் ஒற்றுமை இருக்கிறது.

அமெரிக்கா, ஊட்டா மாகாணத்தை சேர்ந்தவர் ஜெப்ஃ ஹாக். இவரது மனைவி கேம்ப்ரியா. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணமான நிலையில், கேம்ப்ரியாவுக்கு கர்ப்பப்பையில் ஒரு பிரச்னை இருந்ததால் அதனை அகற்றவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். அதனை அகற்றியதால், கேம்ப்ரியா குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை இழந்தார்.

இந்த நிலையில் ஜெப்ஃ ஹாக்கின் தாயாரும், கேம்ப்ரியாவின் மாமியாருமான நான்சி ஹாக் (வயது 56) தனது மகன் - மருமகள் குழந்தையை சுமக்க எண்ணினார். அதன்படி அவர் வாடகை தாயாக இருக்க சம்மதித்தார். 56 வயதுடைய இவரால் நலமாக குழந்தையை பெற்றெடுக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது.

இருப்பினும் தனது மகன் - மருமகளுக்காக ரிஸ்க் எடுக்க துணிந்தார் மாமியார். அதன்படி, மாமியார் நான்சியை அனைவரும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது நான்சி ஹாக், வாடகைத்தாயாக இருந்து தனது மகன் மற்றும் மருமகளுக்காக அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு தனது மாமியார் நான்சியின் செல்லப்பெயரான 'ஹன்னா' என்று பெயரும் சூட்டியுள்ளனர். இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது 5 ஆவதும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சக பயணி மீது சிறுநீர் கழித்த முதியவருக்கு சிறை: பறந்து கொண்டிருந்த விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !