உலகம்
தலை திரும்பிய நிலையில் செத்து விழும் Zombie புறாக்கள்.. மனிதர்களுக்கு பரவுமா? பீதியில் இங்கிலாந்து மக்கள்
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கழுத்து திரும்பிய நிலையில் புறாக்கள் உயிரிழந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் குறிப்பிட்டு சிலர் சோம்பி புறாக்கள் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், இதற்காக காரணத்தை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்து முழுவதும் எச்சம் மூலமாக பரவும் தொற்று நோய் புறாக்களை பாதித்து வருவதாகவும், இந்த பாதிப்பு ஜெர்சி இன புறாக்களை அதிகம் தாக்குவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்படும் புறாவின் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதனால் அதன் கழுத்து தலைகீழாகத் திரும்பிய நிலையில் இறப்பை சந்திப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த நோயால் பாதிக்கப்படும் புறாக்களை கண்டுபிடித்து அதனை காப்பகத்தில் அடைத்துவைக்கும் முறையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நோய்க்கு மருந்து என ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக நோய் பாதிப்பு தீவிரம் அடையும் புறாக்கள் கருணைக்கொலை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குளிர்காலத்தில் இந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த நோய் மனிதருக்கு பரவவாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்ட புறாக்கள் இருப்பது தெரிந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதனால் மனிதர்களுக்கு அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்படலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!