உலகம்

Twitter நிறுவனத்தை கைப்பற்றிய கையோடு CEO பராக் அகர்வால் நீக்கம்: எலான் மஸ்க் முடிவால் பீதியில் ஊழியர்கள்!

உலகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு ட்விட்டரை ஒரு பிரச்சார கருவியாகப் பலரும் பயன்படுத்தினர்.

இந்நிலையில், சில மாதங்களாகவே உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக அ ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகக் கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க் இடையே பிரச்சனை எழுந்தது.

இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாக்குவரா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுபுள்ளிவைத்துள்ளார் எலான் மஸ்க. ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தை உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்டால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்ட கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ட்விட்டரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "என்னால் சேவாக்,சச்சின் போல இருந்திருக்க முடியாது"- தனது உளவியல் பிரச்சனை குறித்து மனம் திறந்த டிராவிட்!