உலகம்

"டைட்டானிக் கப்பலுக்காக திருமணம் கூட செய்யவில்லை.." - 30 ஆண்டு கனவை நினைவாக்கிய பெண் !

உலகத்திலேயே மிகவும் பிரம்மிப்பாக அனைவரும் பார்த்த ஒரு திரைப்படம் தான் டைட்டானிக். 'டைட்டானிக்' திரைப்படம் 1997-ம் ஆண்டு வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் இது உலக மக்களிடமும் பெரிய அளவில் பிரபலமானது. இதனால் இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதையும் பெற்றது.

இந்த படமானது, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த 'டைட்டானிக்' என்ற கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்தது.

1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், பல ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டது. இப்போதும் கூட இந்த கப்பலின் எச்சங்கள் நீருக்கடியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தை கண்ட அனைவரும் அந்த கப்பலை ஒரு முறையாவது நீருக்குள் சென்று நேரில் காண வேண்டும் என்று ஆசை பட்டிருப்பர்..

பல பேருக்கு இந்த ஆசை உருவானாலும், சில பேர் தான் அதற்காக முயற்சி எடுப்பர். அந்த வகையில் தற்போது ஒரு பெண் பல ஆண்டுகளாக பணத்தை சேமித்து நீரில் மூழ்கிய 'டைட்டானிக்' கப்பலின் எச்சங்களை நேரில் பார்த்துள்ளார்.

சுமார் 110 வருடங்கள் கழித்து இந்த கப்பலை ரெனாட்டா (Renata) என்ற பெண் நீருக்குள் மூழ்கி இருந்ததை பார்த்துள்ளார். தனது சிறுவயதில் இருந்தே இந்த கப்பலை பார்த்துவிட வேண்டும் என்று கனவுடன் இருந்த இந்த பெண், இதற்காக சுமார் 30 வருடம் தான் சம்பதித்த பணத்தை சேமித்து வைத்துள்ளார். அதன்படி ரூ.2 கோடி வரை சேமித்த இந்த பெண், அந்த பணத்தை வைத்து கப்பலை பார்க்க விரும்பியுள்ளார்.

இந்த கப்பலை காண்பதற்காக 5 பேர் செல்லக்கூடிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் சென்று கடலுக்கடியில் செலுத்தியுள்ளனர். அங்கே சிதைந்துகிடந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்த்திருக்கிறார். மேலும், இந்தப் பயணத்தில், குழுவிலிருந்த ஒவ்வொருவரும் தலா ரூ.2 கோடியைச் செலவுசெய்திருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தனது கனவு நிறைவேறியுள்ளதாக ரெனாட்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “எனக்கு சிறுவயதாக இருக்கும்போது இந்த கப்பலை அப்போது கண்டுபிடிக்கவில்லை. அதனால் நானே அந்த கப்பலை கண்டுபிடிக்க விரும்பினேன். இந்த கப்பழைய கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அறிவியல் மற்றும் கடலியல் படிப்புகளை படித்தேன். ஆனால் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே, இந்த கப்பலை கண்டுபிடித்தனர்.

ஒருபக்கம் அவர்கள் கண்டுபிடித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் எனது கனவு சிதைந்து விட்டது என்று வேதனையும் இருந்தது. அதன்பிறகு நான் வங்கி தொழிலில் முனைப்புக்காட்டினேன். பிறகு கண்டுபிடித்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க முடிவெடுத்தேன்; அதற்காக வழியை தேடினேன். எனவே நான் கடினமாக உழைத்தேன்.

நான் ஒன்றும் பிறப்பில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை. எனக்கென்று தற்போது வரை ஒரு கார் கூட இல்லை. நான் இன்னும் திருமணமும் செய்யவில்லை. இந்த முடிவுகள் எல்லாமே டைட்டானிக் கப்பலை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதால் தான். தற்போது அந்த அசையும் நிறைவேறியது” என்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: SmartPhone வாங்குவதற்காக 4ம் வகுப்பு படிக்கும் சிறுமி செய்த கொடூர காரியம்.. அதிர்ச்சியடைந்த மருத்துவமனை!