உலகம்
நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு.. துருக்கியில் தொடரும் சோகம் !
துருக்கி, நிலக்கரி சுரங்கம் விபத்தில் சிக்கி முன்னதாக 25 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அடுத்துள்ள வடக்கு பார்ட்டின் மாகாணத்தின் அருகே நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் 150-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் வழக்கம்போல் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் போது சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிலர், சிக்கி கொண்டனர். பின்னர் இதுகுறித்து மீட்புக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் சிக்கியிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டலும், இடிபடுகளில் சிக்கியிருந்த மற்றவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினமாக இருந்துள்ளது. அதோடு முன்னதாக 25 பேர் இருந்துள்ளதாக தகவலும் வெளியானது. மேலும் மீத்தேன் வாயு வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட தகவலும் வெளியானது.
இந்த நிலையில் மீட்பு பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, காயமடைந்தவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. அதன்படி தற்போது உயிரிழப்பு 41-ஆக அதிகரித்துள்ளது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த விபத்து சம்பவம் குறித்து துருக்கி நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்காது. சிக்கி இருப்பவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதே இலக்கு. உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியின் சோமானகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, இதே போன்று ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த விபத்தில் சிக்கி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, சிலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!