உலகம்
பைக்கை தொடர்ந்து பறக்கும் கார்.. சீனா நிறுவனத்தின் சோதனை ஓட்டம் வெற்றி.. சிறப்புகள் என்ன ?
அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது பறக்கும் பைக், கார் வரை உலகம் அதீத அறிவியல் வளர்ச்சியை கண்டுள்ளது.
தற்போதைய நிலையில் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. டெட்ராய்டில் நடந்த வாகன கண்காட்சியில் இந்த பறக்கும் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது சீன நிறுவனம் வடிவமைத்து இருக்கும் அதிநவீன பறக்கும் கார் துபாய் தனது சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. X-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரை இறங்கும் ஆற்றல் உடையது.
ட்ரோன்களை போல் 4 புரொப்பல்லர்களால் இயங்கும் X-2 பறக்கும் காரில் ஒரே நேரத்தில் 2 பேர் பயணிக்கலாம் என இதை உருவாக்கிய சீன நிறுவனம் கூறியுள்ளது. துபாயில் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்த வகை கார் பயன்பாட்டுக்கு வெறும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!