உலகம்
பாலியல் வன்கொடுமை: 6 மாதங்களில் 2200 சிறுவர், சிறுமிகள்.. 2022ம் ஆண்டிற்கான வெளியான அறிக்கையில் அதிர்ச்சி
ஆண்டுதோறும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சர்வதேச பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு சம்மந்தமாக அறிக்கை ஒன்று வெளியிடப்படும். அதன்படி இந்தாண்டிற்கான (2022) வருடாந்திர உலக அறிக்கையின்படி, சர்வதேச பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டில் 170 நாடுகளில் பாகிஸ்தான் 167 வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனம் (NGO) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 6 மாதங்களில் 2,200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளிவரும் 'தி நியூஸ் இன்டர்நேஷனல்' என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சிறுவர் - சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டும் 2211 ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது
அதோடு 79 செய்தி நிறுவனங்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி, பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதில் சிறுவர்கள் - 1,004 பேரும், சிறுமிகள் - 1,207 பேரும் உள்ளனர். பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி 803 குழந்தைகள் குழந்தைகள் கடத்தலும் சிறுவர்கள் - 298, சிறுமிகள் - 243 பேரும் உள்ளனர்.
இப்படி கடத்தப்பட்ட சிறார்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளகப்படுகின்றனர். இந்த துன்புறுத்தல்கள் தொடர்பாக 52% வழக்குகள் நகர்ப்புறங்களிலும், 48% வழக்குகள் கிராமப்புறங்களிலும் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!