உலகம்
அழிவின் பிடியில் புராதான சின்னம்.. சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் இடிந்து விழுந்த பண்டைய சுவர்கள் !
கடந்த 1922-ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியாவில் அமைந்திருந்த புராதான மொஹஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியான மொஹஞ்சதாரோ பல நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டியது.
சுமேரிய, எகிப்திய நாகரிகங்களே பழமையானது என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீகங்கள் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கு இணையாக பழமையானதாக அடையாளம் காணப்பட்டது.
அதோடு, ஆரியர்,திராவிடர் கோட்பாட்டுக்கு வலுமையான ஆதாரமாகவும் இது மாறியது. இதன் பழமை காரணமாக யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோ நகரம் தற்போது அழிவில் பிடியில் சிக்கியுள்ளது.
பாகிஸ்தானில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சிந்து நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த் வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் மொஹஞ்சதாரோ நகரம் அழிவின் பிடியிலுள்ளது.
இதுகுறித்து கூறிய அதிகாரிகள், "வெள்ளம் மொகஞ்சதாரோவை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் வரலாறு காணாத மழையானது பண்டைய நகருக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்வேறு பெரிய சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் இந்தப் பணி நடைபெறுகிறது” எனக் கூறியுள்ளனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !