உலகம்
"கேவலமாக தெரிகிறீர்கள்,பொது வெளியில் வர வேண்டாம்" -அமெரிக்காவில் இந்தியரை அவமானப்படுத்திய சக இந்தியர் !
அமெரிக்காவின் அமைந்துள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரத்தில் இருக்கும் கார் பார்க்கிங்கில் நான்கு இந்தியப் பெண்கள் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அமெரிக்கப் பெண் ஒருவர் ’நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பி போங்க. உங்களைப் பார்த்தாலே வேறுப்பா இருக்கிறது்' என இனவெறியுடன் பேசியுள்ளார்.
மேலும், 'இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் நீங்கள் ஏன் இங்கே வருகீறிர்கள்' என்று பேசி ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் இந்தியப் பெண்கள் மீது இனரீதியாகப் பேசியது டெக்ஸாஸ் நகரின் ப்ளேனோ பகுதியைச் சேர்ந்த எஸ்மெரால்டா அப்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இந்தியரை சக இந்தியரே இனரீதியாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணன் ஜெயராமன் என்ற இந்தியர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஃப்ரீமாண்டில் உள்ள டகோ பெல்லில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு இந்தியரான தேஜிந்தர் சிங் என்பவரை கிருஷ்ணன் ஜெயராமனை இனரீதியாக வசைபாடியுள்ளார்.
ஒரே உணவகத்தில் இருந்த இருவருக்கும் விவாதங்கள் எழுந்த நிலையில், இதில் கோபமான தேஜிந்தர் சிங், 'நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இனி இதுபோன்று பொது வெளியில் வர வேண்டாம்." என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தேஜிந்தர் சிங்கை கைது செய்துஅவர் மீது வெறுப்புக் குற்றம், தாக்குதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!