உலகம்
FINLAND பிரதமர் வீட்டில் ஆபாச புகைப்படம் எடுத்த தோழிகள்.. வெளியான புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சை !
ஃபின்லாந்து பிரதமரான இருப்பவர் சன்னா மரின். வெறும் 34 வயதுடைய இவர், இளம் பிரதமராக பதவியேற்று உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் அண்மைக்காலமாக சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த மாதம், சன்னா மரின் வீட்டில் தனது தோழிகளுடன் மது விருந்து பார்ட்டி பண்ணுவது குறித்த வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் பிரதமர் உட்பட அவரது தோழிகள் அனைவரும் மது அருந்தி ஆட்டம் போட்டனர்.
இது குறித்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், சன்னா மரின் போதை மருந்து உட்கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இவர் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து தான் போதை மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்றும், சோதனைக்கு தயார் என்றும் சன்னி மரின் தெரிவிக்க, அவருக்கு சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவர் போதை எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த சர்ச்சை முழுதாக முடிவதற்குள், மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது பார்ட்டி செய்த அன்று சன்னா மரினாவின் இரண்டு தோழிகள், தங்களது மேலாடைகளை கழற்றி எறிந்த நிலையில், இரண்டு பெண்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பதும், அதில் ஒருபெண் ஃபின்லாந்து என எழுதப்பட்ட அட்டையால் தன்னுடைய உடல் பாகத்தை மறைப்பதும் போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இந்த சர்ச்சைக்கும் சன்னா மரின், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப, அவரும் மன்னிப்பு கோரினார்.
மேலும் பொதுவாழ்க்கையில் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் சன்னா மரின், பொதுவெளி நாகரீகம் பற்றி அறியாதவர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த சர்ச்சை பெரும் பெருபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சன்னா மரின் தனது கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDP) சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் மல்க பேசினார். அப்போது பேசிய அவர், "நானும் ஒரு மனிதன் தான். எனக்கு என்று தனி நேரங்கள் இருக்கிறது. அதில் நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் மகிழ்ச்சி. ஆனால், ஒரு நாள் கூட என் வேலையை நான் தவறவிட்டதில்லை. மேலும், ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட, வேலையில் நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்ப விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!