உலகம்
மசூதி குண்டு வெடிப்பு : குழந்தைகள் உட்பட 30 பேர் பரிதாப பலி.. ஆப்கானில் தொடரும் கொடூரம் !
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. அதோடு அங்கு துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்டவை சரளமாக காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இங்குள்ள தலைநகரான காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்லாமிய முறைப்படி வழக்கம்போல் இரவு பொழுதில் நேற்று தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அறிந்த பொதுமக்கள் அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு படை, இராணுவ படைகளுடன் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆப்கானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், குண்டு வெடிப்புக்கான காரணங்கள் குறித்து அங்குள்ள அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆப்கான் தலைநகரில் உள்ள கடைவீதி ஒன்றில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 22 பேர் காயமடைந்ததுடன் 8 பேர் பரிதாபமாக பலியானர்.
அதோடு அப்பகுதியில் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக சந்திக்கும் நகரின் மேற்கு மாவட்டத்திலும் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலுக்கு சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!