உலகம்
ரசிகர்களுக்காக பாடிபில்டர் செய்த செயல்.. உயிரையே பறித்த சோகம்.. நடந்தது என்ன?
பிரேசில் நாட்டின் ரிபேராவ் பிரிட்டோ பகுதியை சேர்ந்தவர் வால்டிர் செகாடோ (வயது 55). இவர் தனது பாடிபில்டிங் திறமை மூலம் புகழ்பெற்ற பாடிபில்டராகவும், டிக்டாக் நட்சத்திரமாகவும் திகழ்ந்து வந்தார். இவரின் சமூக வலைத்தளங்களை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.
இவர் தனது உடலை மேற்கொண்டு தீவிரமாக காட்ட உயிருக்கு ஆபத்தான ஆல்கஹால், வலி நிவாரணிகளின் கலவை போன்ற ஊசிகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார். இந்த வகை ஊசிகளை எடுத்துக்கொண்டால் கடுமையான நரம்பு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஆனாலும், தனது ரசிகர்களுக்காக மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அந்த வகை ஊசிகளை தொடர்ச்சியாக அவர் எடுத்து வந்துள்ளார். அவரின் இந்த செயல் அவர் உயிரையே பறிக்கும் அளவு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது பிறந்த நாள் அன்று தனது வீட்டில் இருந்த அவர் திடீரென மூச்சித்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அது பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.
‘சின்தோல்’ என்னும் ஊசிகளைப் தொடர்ச்சியாக அவர் பயன்படுத்தியதால், அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!