உலகம்
டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட முன்னாள் மனைவி.. 1400 கி.மீ தாண்டி துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவன்..
அமெரிக்கா-பாகிஸ்தானிய புகைப்படக்கலைஞர் தான் சானியா கான் (வயது 29). இவரும் பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது (வயது 36) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணம் ஆகி, சில காலங்களிலே மன வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதில் ரஹீல் அகமது தற்போது ஜார்ஜியாவிலும், சானியா கான் சிகாகோ நகரத்திலும் வசித்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே தங்களது வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சானியா, கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது திருமண வாழ்க்கையின் கசப்பான நினைவுகளை பகிர்ந்திருந்தார். மேலும் விவாகரத்துக்கு பின்னர் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த சானியாவின் முன்னாள் கணவர் ரஹீல், ஜார்ஜியாவில் இருந்து சுமார் 1400 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து, கார் மூலம் பயணம் செய்து சிகாகோவிற்கு வந்தார். பின்னர் அவரது முன்னாள் மனைவியான சானியாவை தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரஹீலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ரஹீல் உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கையில், அவர்களது மண வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சானியா கான் பொதுவெளியில் பகிர்ந்ததால், ஆத்திரமடைந்த ரஹீல், சானியாவை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!