உலகம்
குளிர் நாடான இங்கிலாந்தில் கடும் வெப்பம்.. உருகும் தார் சாலைகள்.. பருவநிலை மாற்றத்தால் நிகழும் பேரழிவு!
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வந்தனர்.
மேலும் இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால், அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு, அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இங்கிலாந்தில் மட்டுமின்றி, ஸ்பெயின், போர்த்துகல் நாட்டிலும் கடும் வெப்பம் நிலவி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளதால் அங்கு அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் அங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதோடு, மரக்கட்டை இரயில் தண்டவாளம் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பான வீடியோ கூட அண்மையில் வெளியாகி வைரலானது. மேலும் பிரிட்டனில் உள்ள திரையரங்கு ஒன்று, சிவப்பு முடி உள்ளவர்களுக்கு ஏ.சி., ரூமில் இலவசமாக படம் பார்க்கும் வகையில் சலுகை கொடுத்துள்ளது. மேலும் நீச்சல் குளம், மால் உள்ளிட்ட இடங்களில் நேரங்கள் அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், ஸ்டாக்போர்ட்டில் உள்ள தார் சாலை ஒன்று அடிக்கும் வெயிலில் உருகி திரவம் போல் காட்சியளிக்கிறது. மேலும் உருகிய தார் சாலையில் பொதுமக்கள் வாகனத்தில் பயணம் செய்ய இயலவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பாவில் மட்டும் இதுவரை இந்த வெப்ப அலைகளாலும், காட்டுத்தீ நிகழ்வுகளாலும் சுமார் 1500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!