உலகம்
மூதாட்டி உடையில் வங்கியில் கைவரிசை காட்டிய நபர்.. தூம் 2 பட பாணியில் அமெரிக்காவில் நடந்த கொள்ளை சம்பவம்!
தென்கிழக்கு அட்லாண்டாவிற்குட்பட்ட மெக்டோனாக் நகரில் சேஸ் என்ற வங்கி உள்ளது. இங்கு கடந்த திங்களன்று வயது முதிர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் வங்கியை முழுமையாகச் சுற்றிப்பார்த்துவிட்டு திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியைக் காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே நன்றி கார் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வங்கியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பூபோட்டை உடை, வெள்ளை ஷீ, ஆரஞ்சு க்ளவுஸ், தலையில் வெள்ளை நிற விக் அணிந்த நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கட்சி பதிவாகியிருந்தது.
மேலும், மூதாட்டி தோற்றத்தில் மர்ம நபர் ஒருவர் வங்கியில் புகுந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சி.சி.டி.வி காட்சியில் மாறுவேடத்தில் இருந்த நபரின் புகைப்படத்தை போலிஸார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். மூதாட்டி தோற்றத்துடன் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!