உலகம்
ரயிலின் இரு புறமும் பற்றி எரிந்த தீ.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவாவதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
வெப்பத்தின் அளவு அதிகரித்ததால் இங்கிலாந்தில் பல ரயில்கள் ரத்துசெய்யப்பட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் தாக்கம் ஸ்பெயின்,போர்த்துகல் போன்ற நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
அதிலும் குறிப்பாக ஸ்பெயினில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளதால் அங்கு அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், இவற்றில் பல இடங்களில் காட்டூத்தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஸ்பெயினின் வடமேற்கு முதல் தென்மேற்கு பகுதிகள் வரை சுமார் 4,5400 ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக இதுவரை அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஸ்பெயினின் வடக்கு மாகாணமான சமோராவில் உள்ள காடுகளில் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், அதன் நடுவில் பயணிகள் ரெயில் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து கிளம்பிய இந்த ரயில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுதீயில் சிக்கிக்கொண்டுள்ளது.
இரு புறமும் தீ எரிந்த நிலையில், ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். தங்களை சுற்றி தீ எரிவதை அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வழியே செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்பெயின் ரயில்வே தெரிவித்துள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!