உலகம்

ஒரு மசால் தோசை ரூ.1,493 ஆ..? - கல்லாகட்டும் கடை.. அதிர்ச்சியில் உணவு பிரியர்கள் !

அமெரிக்காவின் மேற்கு கடலோரத்தில் அமைந்திருக்கும் சியாட்டில் என்ற பகுதியில் 'Indian Crepe Co' என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் அங்குள்ள இந்திய மக்கள் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய உணவுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில், தமிழ்நாட்டில் பிரபலமான இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடை உள்ளிட்ட உணவுக்கு அங்கே வரவேற்பு அதிகமாக இருக்கிறது. பெயர் மாற்றி விற்பனை செய்யப்படும் இந்த உணவு ஒவ்வொன்றின் விலையும் இந்திய மதிப்பில் ரூ.1000-க்கும் மேலாகும்.

அதாவது அங்கே,

  • Naked Crepe என்று அழைக்கப்படும் சாதா தோசையின் விலை 17.59 டாலர் - இந்திய மதிப்பில் 1,406.02 ரூபாயாகும்.

  • Smashed Potato Crepe என்று அழைக்கப்படும் மசால் தோசை தோசையின் விலை 18.69 டாலர் - இந்திய மதிப்பில் 1,493.95 ரூபாயாகும்.

  • Dunked Doughnut Delight என்று அழைக்கப்படும் சாம்பார் வடையின் விலை 16.49 டாலர் - இந்திய மதிப்பில் 1,318.10 ரூபாயாகும்.

  • Dunked Rice Cake Delight என்று அழைக்கப்படும் சாம்பார் இட்லியின் விலை, 15.39 டாலர் - இந்திய மதிப்பில் 1,230.24 ரூபாயாகும்.

இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இணையவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் எங்கே போனாலும் இந்த தோசையின் விலை மட்டும் அதிகமாக உள்ளது என்று இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read: ரூ. 4-க்கு ஒரு லிட்டர் மாட்டு கோமியம்.. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் அரசு!