உலகம்
பற்றி எரிந்த இரயில் தண்டவாளம்.. இரயில்கள் ரத்து.. அவசர நிலையை அறிவித்த இங்கிலாந்து அரசு! - காரணம் என்ன?
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி, லண்டனில் மரக்கட்டையிலான இரயில்வே தண்டவாள ஒன்று தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் வைரலானது.
இப்படி வரலாறு காணாத அளவுக்கு அங்கு வெப்பம் அதிகரித்துள்ளதால், இனி வரும் காலங்களில் இந்த வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடும் என்பதால், அங்குள்ள மக்களுக்கு 2 நாட்களுக்கு (இன்று, நாளைி) அபாய எச்சரிக்கை விடுக்கும் விதமாக 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மூலம் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு 38.7 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் இங்கிலாந்தில் பதிவானது. அதன்பிறகு தற்போது 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு இரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமானதாக காணப்படுகிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!