உலகம்
"Sandwich கொண்டு போனது ஒரு குத்தமாயா..?" - ரூ.1.43 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்.. இளம்பெண் குமுறல் !
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் ஜெஸிக்கா லீ. ஒரு மாடல் அழகியான இவர், தனது சமூக வலைதளபக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில், டிக் டாக் பக்கத்தில், தனக்கு நேர்ந்த ஒரு இன்னல்களை பற்றி பகிர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் அண்மையில் என் சொந்த வேலை காரணமாக ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தேன். அப்போது கடுமையான பசியின் காரணமாக 12 இன்ச் உள்ள 'சப்வே சாண்ட்விச்' ஒன்றை வாங்கினேன்.
அது சுமார் 11 மணி நேரம் பயணம் என்பதால் அதில் பாதி சாப்பிட்டு மீதி பாதியை பிறகு சாப்பிட்டு கொள்ளலாம் என்று எனது பையில் வைத்திருந்தேன்.
பிறகு ஆஸ்திரேலியாவில் இறங்கியவுடன், ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது என்னிடம் விசாரிக்கையில் தனது பையில் இருந்த அனைத்தையும் கூறிவிட்டேன், சான்விட்ச் இருப்பதை மறந்துவிட்டேன்.
இதையடுத்து அவர்கள் அதை பார்த்ததும், எனக்கு 2,664 ஆஸி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.43 லட்சம்) அபராதம் விதித்தனர். இந்த அபராத தொகையை, நான் வெறும் 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அவகாசமும் கொடுத்துள்ளனர்.
நான் அண்மையில் தான் எனது வேலையில் இருந்து விலகினேன். என்னிடம் இப்போது பணம் ஏதுமில்லை. இதில் இவ்வளவு பெரிய தொகையை என்னால் செலுத்த முடியுமா என்பது கூட எனக்கு தெரியவில்லை. ஆம்., இது என்னுடைய தவறு தான்.
நான் அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. என்னை போல் யாரும் இது மாதிரியான தவறுகளை செய்து விட கூடாது என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன்" என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!