உலகம்

Resign பண்ணியாச்சு.. மாலத்தீவுக்கு பறந்த கோத்தபய: இலங்கையில் பொதுமக்கள் உணவுக்கே வழி இல்லாமல் திண்டாட்டம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாததால் இருந்துவந்தார்.

இதையடுத்து கடந்த 9ம் தேதியில் இருந்து இலங்கை முழுவதும் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அன்றைய தினம் அதிபர் மாளிகையை போராட்டக்காரகள் கைப்பற்றினர். ஆனால் இவர்கள் வருவதற்கு முன்பே அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜபச்சே தப்பிச் சென்றுவிட்டார்.

இவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டு வந்தநிலையில் இலங்கையில் தான் இருக்கிறார் என நேற்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ விமானம் மூலம் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இதுவரை அதிபர் கோத்தபய ராஜபச்சேவின் ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இலங்கையில் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. இருப்பினும் அதிபர், பிரதமர் உடனே பதவி விலக வேண்டும் என தொடர்ந்து இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: பிரபல கேரள பெண் YouTuber மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை.. வீடியோ போடுவதற்காக இப்படியும் செய்வார்களா?