உலகம்

ஒரு French Fries விலை 15,800 ரூபாயா ?.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்: எங்கு தெரியுமா?

இந்திய மக்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களிடையே விருப்பனமான ஒன்றாக உருளைக்கிழங்கு திகழ்கிறது. இந்த உருளைக்கிழங்கில் இந்திய மக்கள், மசாலாக்களை கலந்து வகை வகையான உணவுகளை சமைத்து உண்பர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இதை பெரிதாக வகைப்படுத்தி உண்ணமாட்டார்கள்.

பீட்சா, பர்கர் வரிக்ஷியில் அடுத்து அடங்குவது பிரெஞ்சு பிரைஸ் தான். இந்த பிரெஞ்சு பிரைஸ், உருளைக்கிழங்கை நீளவாக்கில் சீவி, அரைவேக்காடாக எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, மசாலா போடி போட்டு கொடுப்பர். கிட்டத்தட்ட உருளை கிழங்கு சிப்ஸ் போன்று இருக்கும் இதை சாப்பிட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டுவர்.

இப்படி ஒரு 3-4 உருளைக்கிழங்குகளில் செய்யும் பிரெஞ்சு பிரைஸ் விலை இந்தியாவில் சுமார் ரூ.120 வரை விற்கப்படுகிறது. ஆனால் இதனை நியூயார்க் நகர்த்தில் ரூ.15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதாவது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகத்தில் Serendipity3 என்ற உணவகம் ஒன்று உள்ளது. அங்கு 2021-ம் ஆண்டு விலை உயர்ந்த பிரெஞ்சு பிரைஸ் ஒன்று தயாரித்து, கின்னஸ் சாதனையை படைத்தது. இதையடுத்து இந்த பிரெஞ்சு பிரைஸை தற்போது மீண்டும் உணவகத்திற்கு கொண்டு வரவுள்ளதாக அந்த உணவகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி உலக பிரெஞ்சு பிரைஸ் தினமான வரும் ஜூலை 13 (நாளை), புகழ்பெற்ற Crème de la Crème Pommes Frites என்ற பிரெஞ்சு பிரைஸினை விற்பனை செய்யவுள்ளதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது. இந்த பிரெஞ்சு பிரைஸின் விலை, 200 டாலர்களாகும் இந்திய மதிப்பில் ரூ.15,800 ஆகும்.

அப்படி இதில் என்ன விசேஷம் என்று கேட்டால், இதில் செய்யப்படும் உருளைக்கிழங்கானது, பிரீமியம் சிப்பர்பெக் போட்டேடோஸ் (Chipperbec Potatoes) என்று சொல்லப்படும் தென் மேற்கு பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் அது சுத்தமான வாத்து கொழுப்பில் மூன்று முறை சமைக்கப்படுகிறது. மேலும் இதில், செர்ரி பழம், தங்க துகள்கள் (23K edible gold dust) கலந்து செய்யப்படுகிறது. இதனாலே இதன் விலை 200 டாலர் ஆகிறது.

'என்னதான் இருந்தாலும், ரெண்டு உருளைக்கிழங்கும் 200 டாலர் ரொம்ப அதிகம் தான் பா" என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பிரபல ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட தீம் இசையமைப்பாளர் மரணம்.. கலங்கும் திரையுலகம்!