உலகம்
8 ஆண்டுகள்.. 1,900 கி.மீ பயணம்.. அனைத்தும் ஒரு நாய்க்காகவா? - இணையத்தில் ரெண்டாகும் பெண்ணின் செயல் !
அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் பெட்ஸி டிஹான் என்பவர் வசித்து வந்தார். அவர் பிட்புல் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அதன் தோலில் சிப் ஒன்றையும் பொருத்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த கடந்த 2014ம் ஆண்டில் ஹார்லி என்று பெயரிடப்பட்ட அந்த பிட் புல் வகை நாய் தொலைத்து போயுள்ளது.
தான் செல்லமாக வளர்த்த நாயை காணாததால் அதை அவர் பல இடங்களில் தேடியுள்ளார். மேலும் போஸ்டர் ஒட்டுவது, செய்திதாளில் விளம்பரம் கொடுப்பது போன்ற விஷயங்களையும் அவர் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் நாய் கிடைக்காததால் பெட்ஸி டிஹான் ப்ளோரிடாவிலிருந்து மிசூரி மாகாணத்துக்குக் குடி பெயர்ந்துள்ளார். தனது நாய் தொலைத்த துக்கத்தில் இருந்து மீளாத அவர் வேறு எந்த நாயையும் வளர்க்கவில்லை.
இந்த நிலையில், நாய் தொலைத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு விலங்கு அமைப்பிடமிருந்து பெட்ஸி டிஹானுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் ஒரு பிட் புல் வகை நாய் தங்களிடம் வந்துள்ளதாகவும், அதன் தோலிலிருந்த சிப் மூலம் தங்களை தொடர்பு கொண்டதாகவும், அது உங்கள் நாயா? என்றும் கேட்டுள்ளனர்.
இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த பெட்ஸி டிஹான், அது தனது நாய்தான் என்றும், உடனே தான் அங்கு வந்து அதை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அதன்படி உடனே தனது காரில் கிளம்பிய அவர், சுமார் 1,900 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ப்ளோரிடா சென்றுள்ளார்.
அங்கு சென்று தனது நாயை கண்ட அவர், மிகவும் மகிழ்ச்சியடைந்து அதை மீண்டும் தனது வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நாயை மீண்டும் பார்த்ததில் தான் அதிக மகிழ்ச்சி அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!