உலகம்
பத்ம விபூஷன் விருது பெற்ற முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
ஜப்பான் வரலாற்றில் அதிகமுறை பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றவர் ஷின்சோ அபே. இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
ஷின்சோ அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஜப்பானின் அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அவர் மேல் குண்டு பாய்ந்ததாகவும், அவர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னணி செய்தி நிறுவங்களின் கூறியுள்ளன.
அவர் மேல் இரண்டு குண்டுகள் பாய்ந்தது என்றும், ரத்தக் காயங்களுடன் ஷின்சோ அபே ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஷின்சோ அபே உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 2020ல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பேசிய அவர், "நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை என் உடல்நிலை எனக்கு அளிக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை" என கூறியிருந்தார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு